இது தற்காலிக புயல்.. காற்று குவிவது குறைந்ததால் மழை இல்லை - வானிலை மையம்
வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கு தொலைவில் 310 கிலோமீட்டர் தொலைவில், சென்னையில் தெற்கு 480 கிலோமீட்டர் தொலைவில் இடம் பெற்றுள்ளது. 30 ஆம் தேதி புயல் கரையை கடக்கிறது. அந்த நேரத்தில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
29 தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30 தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரும் எனக்கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 02 தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 03-12-2024 மற்றும் 04-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று முதல் நாளை மாலை வரை வடதமிழக கடலோர மாவட்டங்களில் புதுவை காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசும் , மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். நாளை முதல் 30 ஆம் தேதி வரை கடலூர் மாவட்டங்களில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீச கூடும்.30 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
வடகிழக்கு பருவ மழை பொறுத்தவரை கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி வரை 350 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புயல் மிகவும் தாமதமாக நகர்ந்து வருகிறது. நேற்று முதல் புயலின் வேகம் குறைந்துள்ளது. பல்வேறு காரணமாக புயலில் வேகம் குறைந்துள்ளது, தற்போது புயல் கடலில் நிலை கொண்டுள்ளது.
இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும்,நேற்று புயலின் வேகம் குறைந்து இருந்தது ஆனால் தற்பொழுது அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று இரவு முதல் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும், இந்தப் புயலானது புயலின் ஆரம்ப கட்டத்திற்கு சென்று வலுவிழந்து விடும்,புயலின் அளவிற்கு செல்லாமல் வலுவிழந்து விடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவடைவதற்கு, வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் விரிவடைதல் போன்ற பல காரணங்கள் உள்ளன. நவ.26 மற்றும் 27 தேதிகளில், காற்று குவிதல் நல்லதொரு நிலையில் இருந்தது. ஆனால், நேற்று இந்த காற்று குவிதல் குறைந்துள்ளது. அதேநேரம் வளிமண்டலத்தின் மேல்பகுதியில், காற்று விரிவடைதல் தொடர்ந்து நிலை கொண்டிருக்கிறது. அதேபோல், காற்றின் திசைமாறும் மற்றும் வேகம் மாறும் பகுதி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியில், சாதகமாக இருக்கிறது.
அதேபோல், நிலப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், மேக கூட்டங்கள் உருவாவது குறைந்துள்ளது. மேலும், நகர்வு வெகுவாக குறைந்திருக்கிறது. வேகம் குறைந்ததால், புதன்கிழமையன்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. எனவேதான், வானிலை மையம் கொடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கைத் திரும்பப் பெறப்பட்டது. இலங்கைக்கு அருகில் இருக்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கிச் செல்லும் காற்றின்போக்கு நிலப்பகுதியில் உராய்வு ஏற்படுவதால், மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், வட திசையில், அது நகர்ந்து செல்ல முடியாத அளவுக்கு எதிரெதிர் திசையில் இருக்கின்ற காற்றின் போக்கு இருப்பதால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மழையளவும் குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?