நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு 9.53 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோமந்தாங் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வுகள் அருகில் உள்ள மனாங், தோல்பா மற்றும் மியாக்டி ஆகிய மாவட்டங்களிலும் உணரப்பட்டன. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிரிழப்போ அல்லது பொருட்களுக்குச் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நிலைமையைக் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இரு வாரங்களுக்கு முன்பு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நேபாளத்தில் ஏற்கனவே சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, உயிரிழப்புகளும் பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நில அதிர்வு மற்றும் மோசமான வானிலையால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அந்நாட்டு மக்களுக்கு மேலும் கவலையை அளித்துள்ளது
மற்றொரு சம்பவமாக, கண்டகி மாகாணத்தின் பர்பத் மாவட்டத்தில் உள்ள கிம்ருங் ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஆற்றின் நீர் ஓட்டம் தடைபட்டுள்ளது. மோடி ஆற்றின் கிளையாறான இந்த கிம்ருங் ஆற்றில் நீர் தடைபட்டுள்ளதால், காளிகண்டகி ஆறு சங்கமிக்கும் பகுதி வரை உள்ள ஆற்றோரக் குடியிருப்புகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு 8 மணிக்கு வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், ஆற்று நீர் அடைப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் எச்சரித்துள்ளது. இதனால் நயாபுல், பிரேதாந்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LIVE 24 X 7