இதையடுத்து இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் "தான் அதை செய்யலாம், ஒருவேளை செய்யாமல் இருக்கலாம் எனக் கூறினார். தான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது என்றும், ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில், உள்ள ஃபோர்டோ யூரேனியம் செறிவூட்டும் மையத்தை எப்படி தாக்குவது? எனும் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானை தாக்கும் திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்தாலும் தாக்குதலை தொடுக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.
LIVE 24 X 7









