#JUSTIN : Bike Accident in Dindigul : "ஒரே இடி.." வினாடியில் இளைஞர் பலி - திக் திக் காட்சி | CCTV
இருசக்கர வாகனம் வேன் மீது உரசியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இளைஞர்களின் பதறவைக்கும் காட்சிகள் வெளியானது.
இருசக்கர வாகனம் வேன் மீது உரசியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இளைஞர்களின் பதறவைக்கும் காட்சிகள் வெளியானது.
கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர்.
UGC NET Results 2024 Date : நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1000 கிலோ நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக 25 பேருக்கு வழங்கப்பட்ட சம்மன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா ஊராட்சிகளின் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை 2வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.
கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.