அப்போது அங்கு காவலில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். அதனைக் கேட்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளில் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சட்டையை கழற்றி ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பொது இடத்தில் மது போதையில் ஆபாசமாக பேசியது தொடர்பாக 2 பேர் மீதும் கானாவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழலில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாரிடமே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









