தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பார்களின் உரிமம் காலாவதியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த 2,000-க்கும் மேற்பட்ட பார்களின் உரிமம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய டெண்டர் நடைமுறைகள் இன்னும் நிறைவுபெறாததால், இதுவரை தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த ஒப்பந்த நீட்டிப்பும் காலாவதியாகியுள்ளது.
இதையடுத்து, புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டு, உரிமங்கள் இறுதி செய்யப்படும் வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4,765 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றுடன் இணைந்து அரசு அனுமதியுடன் சுமார் 2,400 பார்கள் இயங்கி வந்தன. இவற்றின் தற்காலிக உரிம நீட்டிப்பு ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால், தற்போது பார்களின் செயல்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்து, புதிய உரிமையாளர்கள் தேர்வு செய்யப்படும் வரை டாஸ்மாக் பார்கள் திறக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LIVE 24 X 7