தமிழ்நாடு

TN 2026 -27 பட்ஜெட் : இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத். விவசாயிகளுக்கான பட்ஜெட்டா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.

TN 2026 -27 பட்ஜெட் : இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார்  அமைச்சர் வினோத். விவசாயிகளுக்கான பட்ஜெட்டா?
TN Agriculture Budget 2026 -2027
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத் தனது உரையின் போது முதலமைச்சர் விஜய் குறித்து புகழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது திமுக தரப்பு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபாநாயகர் இடைமறித்து "பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள்" என அமைச்சர் வினோத்துக்கு அறிவுரை வழங்கினார். அதிலும், அமைச்சர் வினோத் முதலமைச்சர் விஜயை "கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய். திரைமன்றங்களில் மட்டுமல்ல சட்டமன்றங்களிலும் நீங்கள் தான் நாயகன்" என முதலமைச்சர் விஜய் குறித்து அமைச்சர் புகழாரம்.

அதுமட்டுமின்றி, "இந்த பட்ஜெட் ஆனது வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளது" என அமைச்சர் வினோத் அறிவித்தார்.

மேலும், "வேளாண் விளைபொருட்களுக்கு 100 சதவீத பயிர் காப்பீடு வழங்க முடிவு எனவும்,

நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது. விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன எனவும்,

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும்,

ரூ.122.51 மண்வளப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் மற்றும் ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் எனவும்,

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடக்காக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு எனவும்,

பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்கு
ரூ.203.46 கோடி நிதி ஒதுக்கீடு எனவும், மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு எனவும்,

மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் "வெற்றி விவசாயி"
விருது வழங்கப்படும். முதற்பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும். இவ்விருதுக்காக ரூ. 67.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்,

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு எனவும்,

விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக 5 சிறந்த விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் எனவும்,

வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில் என்ற அடிப்படையில் ஒவ்வொரு உழவருக்கும் AI அடிப்படையிலான உழவர் செயலி; இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
எனவும், 17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு எனவும், மழை, வெயிலிலிருந்து விளைப் பொருட்களை பாதுகாக்க 43,500 தார்ப் பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு எனவும்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படும். மேலும், சூரியசக்தி பம்புசெட்டுகள் மற்றும் 300 ஆழ்துளை, குழாய்க்கிணறுகளுக்கு 100% மானியம் வழங்கப்படும் எனவும்,

பனைவிதை மற்றும் பனங்கன்றுகள் விநியோகம் செய்தல், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பனைப்பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும்,

தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு எனவும்,

தமிழ்நாட்டில் 100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சியும் உரிமமும் வழங்கப்படும் மற்றும் பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு "வன்மகள்" என பெயரிடப்பட்டுள்ளது எனவும்,

"வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்ட திட்டம்" - வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் நோக்கில் 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' எனும் புதிய திட்டம் அறிமுகம். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு எனவும்,

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும் மற்றும் அஞ்சலை அம்மாள் பெயரில் முதல் பரிசு ரூ.2.50 லட்சம், 2ஆவது பரிசு ரூ.1.50 லட்சம், 3ஆவது பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் எனவும்,

தரமான பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு எனவும்,

உதகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையம் அமைக்கப்படும் எனவும், கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு எனவும்,

திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணத்தில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இதற்காக ரூ.4.6 கோடி நிதி ஒதுக்கீடு எனவும்,

இறுதியில், இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல்துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் வேளாண்த்துறை அமைச்சர் வினோத் தனது வேளாண் பட்ஜெட் தாக்கல் உரையை இரண்டரை மணிநேரம் அறிவித்தார்.