திரைப்படத் தயாரிப்புக்காகப் பெற்ற முன்பணத்தைத் திருப்பித்தரவில்லை என்பது தொடர்பான வழக்கில், மூத்த நடிகர் ராஜ்கிரணுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ரூ.40 லட்சம் மோசடிப் புகார்
சென்னை மீஞ்சூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சரவணன், கடந்த 2022-ஆம் ஆண்டு படம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக வழங்கியுள்ளார். ஆனால், அத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படாததால், முன்பணத்தைத் திருப்பித் தருமாறு ராஜ்கிரணிடம் அவர் கேட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம், 2025-ஆம் ஆண்டு ரூ.10 லட்சத்தை ராஜ்கிரண் திருப்பிக் கொடுத்துள்ளார். எனினும், மீதமுள்ள ரூ.40 லட்சத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி, 2025 செப்டம்பரில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ராஜ்கிரண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
"குற்றவியல் சாயம் பூசப்பட்டுள்ளது"
இந்த வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து விலக்குக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்கிரண் மனுத்தாக்கல் செய்தார். அதில், "2022-ஆம் ஆண்டு நடந்த ஒப்பந்தம் தொடர்பாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை உரிமையியல் தொடர்பான இந்த விவகாரத்திற்கு வேண்டுமென்றே குற்றவியல் சாயம் பூசப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நீண்டகாலமாக இருக்கும் நான் எங்கும் தப்பியோட மாட்டேன்" எனத் தெரிவித்திருந்தார்.
நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ரமேஷ், நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிபதி விதித்துள்ளார்.

LIVE 24 X 7