தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் பல இடங்களில் தீம் (Theme) அடிப்படையிலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் ரோபோக்கள் சாக்லேட் வழங்கி வரவேற்றது முதல், தேனியில் மிகக் குறைந்த வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட மையம் வரை பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாக்லேட் கொடுத்த ரோபோவும் பசுமை விழிப்புணர்வும்
கோவை அரசு கலைக்கல்லூரி வாக்குச்சாவடியில், வாக்களிக்க வந்தவர்களை வரவேற்க நவீன ரோபோ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரோபோ வாக்காளர்களுக்கு சாக்லேட் வழங்கி வரவேற்றது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் 10 'பசுமை வாக்குச்சாவடிகள்' அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு, இயற்கைக்கு உகந்த முறையில் அலங்காரங்கள் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மகளிர் நிர்வகிக்கும் 'பிங்க்' வாக்குச்சாவடிகள்
பெண் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், முற்றிலும் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் 'பிங்க்' (Pink) வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தேர்தல் அலுவலர்கள் முதல் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் வரை அனைவரும் பெண்களே. இந்த மையங்கள் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத் தோரணங்கள் மற்றும் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுப் பெண்களைக் கவர்ந்து வருகின்றன.
5 பேருக்காக ஒரு வாக்குச்சாவடி
தேர்தல் வரலாற்றில் ஒரு வியப்பான நிகழ்வாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் வசிக்கும் வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் இருக்கும் இந்த வாக்காளர்கள் தங்களது உரிமையை நிலைநாட்டத் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.

LIVE 24 X 7