கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வந்தாலும், நேற்று அட்சய திருதியை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. விலையேற்றத்தைப் பொருட்படுத்தாமல் மங்கலமான நாளில் தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆபரணத் தங்கத்தின் விலை சற்றுக் குறைந்து நகை வாங்குவோருக்கு நிம்மதி அளித்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ₹60 குறைந்து, ஒரு கிராம் ₹14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ₹480 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ₹1,14,400-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ₹1,14,880 வரை சென்ற தங்கம் விலை, இன்று சற்றுக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றமில்லாத வெள்ளி விலை
தங்கம் விலை சரிவைக் கண்டாலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ₹280-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹2,80,000-க்கும் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

LIVE 24 X 7