தீபாவளி நெருங்க நெருங்க தங்கம் விலை கிடுகிடு உயர்வு! ஒரே நாளில் மீண்டும் அதிர்ச்சி!

தீபாவளி நெருங்க நெருங்க தங்கம் விலை கிடுகிடு உயர்வு! ஒரே நாளில் மீண்டும் அதிர்ச்சி!

இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author: Bhavani தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,02,600 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

கடந்த வார இறுதியில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. குறிப்பாக, சனிக்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் சரிந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், வாரத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 1-ம் தேதி விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இருந்த தங்கம், 2-ம் தேதி சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று(நவ.,03) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-ஐ எட்டியது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் இன்று (நவம்பர் 4) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.1,02,600-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,825-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.