வரலாற்றில் முதல்முறையாக கடந்த 7-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 90,000-ஐ கடந்த நிலையில், அதைத் தொடர்ந்து தினமும் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 14 ஆம் தேதி ரூ. 1,960-ம், 15-ஆம் ரூ. 280-ம், நேற்று ரூ. 320-ம் உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக ரூ. 2,400 அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 12,200-க்கும், ஒரு சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், இந்தத் தொடர் உயர்வு நீடித்தால், ஒரு சவரன் தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று நகை வியாபார வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
வெள்ளி விலை நிலவரம்
அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை, இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாகக் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிராமுக்கு ரூ. 3 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 203-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தக் தொடர் விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7









