வரலாற்றில் முதல்முறையாக கடந்த 7-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 90,000-ஐ கடந்த நிலையில், அதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளையிலும் விலை அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 14-ஆம் தேதி ரூ. 1,960-ம், நேற்று (அக்.15) ரூ. 280-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 94,880-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் மேலும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,900-க்கும், ஒரு சவரன் ரூ. 95,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று சற்றுக் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்த நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ. 206-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தக் தொடர் விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7









