நேற்று முன் தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கு விற்பனையானது.
இன்றைய அதிரடி விலை உயர்வு
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7









