சென்னையில் தனது காதலிக்கு அவரது பிறந்தநாளுக்காக ஐ-போன் (iPhone) பரிசளிக்கத் திட்டமிட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்ட 24 வயது இளைஞரைச் சென்னை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 'மெட்ரோ' படப் பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மலர்விழி என்பவர் தனது 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் அமைந்தகரை கெனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முகத்தில் வெள்ளை கர்ச்சிப் கட்டிக் கொண்டு நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், மலர்விழியின் வண்டியில் மோதுவது போல் வந்து, பின்னால் அமர்ந்திருந்த அவரது மகளின் கழுத்தில் இருந்த 1.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் மலர்விழி புகார் அளித்தார்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். திருடன் தனது முகமூடியைக் கழற்றாமலும், வண்டியில் நம்பர் பிளேட் இல்லாமலும் சுற்றியதால் அவனது அடையாளத்தைக் கண்டுபிடிப்பதில் போலீசாருக்குப் பெரும் சவால் ஏற்பட்டது.
இருப்பினும், குற்றவாளி 'வரிக்குதிரை' (Zebra) வரிகள் போன்ற கோடு போட்ட சட்டை அணிந்திருந்ததை முக்கிய அடையாளமாக வைத்துக் கொண்டு, போலீசார் முந்தைய நேரத்து சிசிடிவி காட்சிகளைப் பின்னோக்கி ஆய்வு செய்தனர். அதில், அவன் மதியம் முதல் நள்ளிரவு வரை சென்னை முழுவதும் சுற்றித் திரிந்ததும், அமைந்தகரையில் திருடுவதற்கு முன்னதாக மாதவரம், அண்ணா நகர் என 3 இடங்களில் செயின் பறிக்க முயன்று தோற்று, 4-ஆவது இடத்தில்தான் மலர்விழியின் மகளிடம் நகையைப் பறித்ததும் அம்பலமானது.
இந்த 'வரிக்குதிரை' சட்டையைத் துப்பு துலக்கிச் சென்ற போலீசார், புளியந்தோப்பு பகுதியில் வைத்துச் சம்பந்தப்பட்ட திருடனைக் கைது செய்தனர். விசாரணையில் அவன் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சரவணன் (24) என்பதும், அண்ணா சாலையில் உள்ள மாலில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
தான் காதலிக்கும் பெண்ணுக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருவதால், அவருக்கு 'ஐபோன்' வாங்கித் தரத் திட்டமிட்டதாகவும், பலரிடம் கடன் கேட்டும் கிடைக்காததால் ஒரே நேரத்தில் அதிகப் பணம் சம்பாதிக்கச் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் சரவணன் வாக்குமூலம் அளித்தான். அவரிடமிருந்து 1.5 சவரன் தங்க நகையையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் மீட்ட போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

LIVE 24 X 7