தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளே ஷாக்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளே ஷாக்.. தங்கம் விலை கடும் உயர்வு!
Gold Rate
கடந்த வாரம் முழுவதும் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் சரிவைக் கண்டிருந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் உயர்வையே சந்தித்து வந்தது. இடையே கடந்த வியாழக்கிழமை மட்டும் சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 வரை குறைந்தது. இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், வாரத் தொடக்கமான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. சென்னையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,960-ஐ எட்டியுள்ளது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகி வருகிறது.