தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டு, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவரான இசக்கி ராஜா (46), பிரபல வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் வாங்கப்பட்ட தங்க நகையில் உலோகம் அதிகமாகக் கலந்திருப்பதாகக் கூறி, அதை வாங்கிய நபர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆதரவாகப் பேசிய இசக்கி ராஜா, நகையின் தொகையான ரூ.4,22,000 பெற்றுக் கொண்டதுடன், கூடுதலாக ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வணிகர்கள் சங்கம் சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து, இசக்கி ராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தலைவர் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், பசும்பொன் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல் நிலைய நுழைவு வாயில் பூட்டப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, அவரை மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், காவல்துறையின் வாகனத்தை மறித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவரை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் காவல் நிலையத்திற்கே கொண்டு சென்றதால் அப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்தது.
அசம்பாவிதங்களைத் தடுக்க பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி ஜெ.எம். 1 நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு இசக்கி ராஜா ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வரை 15 நாட்கள் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

LIVE 24 X 7