தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடலூரில் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் ஒரு நாளைக்கு மூன்று கூட்டங்களில் பங்கேற்று வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத் திட்டங்களை அடுத்தடுத்து ரத்து செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி சிக்கலும் ரத்து முடிவும்
நாளை கடலூரில் பிரசாரம் மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடலூர் மஞ்சள் நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தக் காவல்துறை பச்சைக்கொடி காட்டியிருந்தது. ஆனால், தவெக தரப்பில் 'ரோடு ஷோ' நடத்தவும் அனுமதி கோரப்பட்டது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணங்களைக் காட்டி ரோடு ஷோ-வுக்குக் காவல்துறை அனுமதி மறுத்ததால், அதிருப்தி அடைந்த விஜய் தரப்பு ஒட்டுமொத்த பிரசாரத்தையுமே ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.
தொண்டர்கள் மத்தியில் சலிப்பு?
ஏற்கனவே இன்று காலை பெரம்பூர் தொகுதியில் திட்டமிடப்பட்டிருந்த வீடு வீடாகச் செல்லும் பிரசாரமும் ரத்து செய்யப்பட்டிருந்தது. சென்னை பிரசாரம் முடிந்து மூன்று நாட்களாகியும் அடுத்த பிரசாரக் களத்திற்கு விஜய் வராதது, தவெக தொண்டர்களிடையே ஒருவித சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் மற்ற கட்சிகள் களத்தில் தீவிரமாகச் செயல்படும் போது, விஜய்யின் இந்தத் தொடர் ரத்து முடிவுகள் அவரது மாற்றுத் திட்டம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

LIVE 24 X 7