தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், "முந்தைய ஆட்சியில் நடைபெற்ற நடவடிக்கைகள் தொடர்பாக மூன்று முக்கியத் துறைகளை ஆய்வு செய்த அறிக்கைகள் எனது மேஜையில் உள்ளன. நிதியமைச்சர் குறிப்பிட்டதைப் போல, அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் தயாராக இருக்கின்றன. அந்த கோப்புகளை என்னை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள்; எந்த நேரத்தில் எதைத் திறக்க வேண்டுமோ அப்போது சரியாகத் திறப்போம்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொதுமக்களிடம் என்ன பேச வேண்டும், எவ்வாறு பேச வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் பேசத் தொடங்கினால் அது பாதிப்பை ஏற்படுத்தும், வரும் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் அல்லவா?" என்று நயம்படக் குறிப்பிட்டார்.
முன்னதாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி, வீடு கட்டும் திட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வீடுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதற்குக் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், இத்திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஐ. பெரியசாமி, பயனாளிகளை அதிகாரிகளே தேர்வு செய்வதாகவும், தவறுகளைச் சுட்டிக்காட்டி திட்டத்தையே நிறுத்தக் கூடாது என்றும், சாதி, மத, கட்சி பாகுபாடின்றி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சமஸ் தொகுத்த 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' புத்தகத்தில் 'விஜய் 100: ஊழலுக்கு எதிரான ஓர் அடி' என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த ஆட்சியில் தவறுகள் நடந்திருக்கலாம் என்பதை ஒப்புக் கொண்டதற்காக ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அதற்குப் பதிலளித்த ஐ. பெரியசாமி, தாம் மக்களிடம் அன்பாகவும் அக்கறையாகவும் பேசியதாலேயே 7 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறச் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

LIVE 24 X 7