ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.காவுக்கு கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அனைத்து தொகுதிகளிலும் பாஜக-வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா., எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு கட்சியின் முதல் முக்கிய செயற்குழு கூட்டம் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கூட்டணி அரசியலில் ஏற்பட்ட சவால்கள், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கட்சியின் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதிலும் முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது புதிய அரசியல் அணுகுமுறையைத் தேர்வு செய்வதா என்ற கேள்வியும் கூட்டத்தில் எதிரொலித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்ற கருத்தை சில நிர்வாகிகள் முன்வைத்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு த.மா.கா. மேற்கொள்ளும் அடுத்த அரசியல் நகர்வு என்ன, ஜி.கே. வாசனின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியை நோக்கி த.மா.கா. நகர்கிறதா என்ற கேள்வியும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

LIVE 24 X 7