மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) ஆதரவு தெரிவித்துள்ளது. ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி நகர்வாக பார்க்கப்படுகிறது.
தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு அறிவிப்பு :
நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மாற்றத்துக்கான அரசியல் சூழல் உருவாகி வருவதாகவும், புதிய நிர்வாக முறைக்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காமராஜர் கொள்கைகளை முன்னிறுத்தும் தவெக :
தனது அறிக்கையில், பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வெளிப்படையான நிர்வாகத்தையும், மக்கள் நலனுக்கான ஆட்சியையும் முன்னெடுத்து வருவதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி நிர்வாகத்தில் நேர்மை மற்றும் ஊழலற்ற செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜி.கே.மூப்பனார் எண்ணங்களுக்கு ஏற்ப வளர்ச்சி :
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோர் கொண்டிருந்த சிந்தனைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் புதிய அரசியல் மாற்றம் அமைய வேண்டும் என தமாகா தெரிவித்துள்ளது.
மக்கள் நலன், நேர்மையான நிர்வாகம் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தவெக கூட்டணிக்கு இந்த இடைத்தேர்தலில் ஆதரவு வழங்குவதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு :
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதரவு, தமிழக அரசியல் களத்தில் கூட்டணி நிலைப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LIVE 24 X 7