தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் தற்போது குதிரை பேரம் நடப்பதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் பலத்தை அறிந்துகொள்வதற்காக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் தங்களுக்கு வலுவான கட்டமைப்பும் தொண்டர்களும் இருப்பதால், தங்களின் பலத்தைச் சோதிக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.
அதேநேரம், விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே அதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் தற்போது குதிரை பேரம் பகிரங்கமாக நடந்து வருகிறது. அதற்கு நீங்களும் நானும் சாட்சியாக இருக்கிறோம்; இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை" என குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க-வின் அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு இடதுசாரி கட்சிகளும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல்வர் விஜய் தலைமையில் ப.சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கவில்லை. அதற்கு முன்னதாகவே இரு கட்சிகளின் தலைவர்களும் முதல்வர் விஜய்யைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7