இந்தியா

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.." மருமகனை திருமணம் செய்த மாமியார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியார் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Son in law marries Mother in law
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருமகன் தனது சொந்த மாமியாரையே முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் அருகே உள்ள அக்பர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மருமகன், தனது மனைவியைப் பிரிந்துவிட்டு மாமியாரையே முறைப்படி திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இனிமேலும் இந்த உறவை மறைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த இருவரும், அங்குள்ள நீதிமன்றத்தில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்துகொண்டனர்.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

திருமணப் பதிவுச் சான்றிதழுடன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தங்களது இந்த உறவை ஏற்றுக்கொண்டு அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று அந்தத் தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்

இந்த விசித்திரத் திருமணம் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறினாலும், பலர் சமூக ஒழுக்கம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையில் எவ்விதப் புகாரும் அளிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது உண்மையா அல்லது சமூக வலைதள வதந்தியா என்ற கேள்வியும் ஒருபுறம் எழுப்பப்பட்டு வருகிறது.