K U M U D A M   N E W S

வெளுக்கப்போகும் கனமழை... தீபாவளிக்கு வெடி எல்லாம் புஸ்.. ஆகிடுமோ?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 30) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தோழியை சீண்டிய ரசிகரை தீர்த்து கட்டிய நடிகருக்கு ஜாமின்

தனது தோழியை தொல்லை செய்ததாக ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ajith: யூரோ கார் ரேஸ்... அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி... ஒருவேளை அப்படி இருக்குமோ..?

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.

தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்ட போலீசார் - பரபரப்பின் உச்சம்..என்ன காரணம்?

வெளியூர் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

TVK Vijay: பாஜக போல திமுக அரசும் பாசிசம் தான்... விஜய் சொன்னது சரி... ஜெயக்குமார் தக் லைஃப்!

மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம் தான்; பாசிசம் அல்லாமல் பாயாசமா? நடிகர் விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 3 லட்சம் பேர்.. சென்னையை காலி செய்த மக்கள்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீராத ராகிங் கொடுமை - தலைநகரில் நடந்த கொடூரம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5ம் ஆண்டு மாணாவர்கள் 2 பேர் மீது கீழ்ப்பாக்கம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளிக்கு முன்னே வந்த மிக முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருந்த 2,877 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் திடீரென போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.