சட்டென மாறிய வானிலை... சென்னையை குளிர்வித்த மழை
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆபத்தான முறையில் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 30) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனது தோழியை தொல்லை செய்ததாக ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.
வெளியூர் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம் தான்; பாசிசம் அல்லாமல் பாயாசமா? நடிகர் விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5ம் ஆண்டு மாணாவர்கள் 2 பேர் மீது கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருந்த 2,877 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமரன் படத்தில் நடித்தது பற்றியும் மேஜர் முகுந்த வரதராஜன் குறித்தும் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் பற்றி குமுதம் செய்திகளுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை தற்போது பார்க்கலாம்.
தீபாவளியை முன்னிட்டு கோவை - திண்டுக்கல்லுக்கு இன்று முதல் நவம்பர் 6 வரை மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை ரயில் நிலைய சந்திப்பில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்ட ரயில் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விஜய்க்கு கோபம் வரவைப்பதற்காக அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து சொல்லியிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அதன்பின் உரையாற்றிய அவர், தமிழக மீனவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம்; மத்திய அரசும் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கு விற்பனையாகிறது.
தமிழக ஊடகங்கள் தன்னை இருட்டடிப்பு செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சூர்யா நடித்துள்ள கங்குவா நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்