K U M U D A M   N E W S

சென்னையில் மின்தடை ஏன்? மின்வாரியம் விளக்கம்

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் திடீர் மின் தடை ஏற்பட்டது ஏன்?.. மின்வாரியம் விளக்கம்!

'மின்தடை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

#BREAKING || மனோ மகன்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓட்டம்?

போலீசாரால் தேடப்பட்டு வரும் பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர் 

இருளில் மூழ்கிய சென்னை... திடீரென கட் ஆன மின்சாரம்

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக சென்னை நகரமே இருளில் மூழ்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர் 

நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்.. ஏன் தெரியுமா?

'' ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. தொழில் அதிபர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தெரிவித்துள்ளார்.

சென்னை அழைத்து வரப்பட்டார் மகாவிஷ்ணு

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர் 

#BREAKING | திமுக பவளவிழா - முதலமைச்சர் அழைப்பு

திமுகவின் பவள விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது - முதலமைச்சர்

அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த தமிழர்கள்!

. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்துக்கு திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 'நீங்கள் மீண்டும் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு வர வேண்டும்' என்று முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

RGBSI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.100 கோடி முதலீடு செய்ய RGBSI நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

#breaking | அமலாக்கத்துறை சோதனை - 4 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் - பள்ளிப்பட்டு அருகே அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக 4 இளைஞர்களைஅமலாக்கத்துறை கைது செய்தது. பணப்பரிவர்த்தனை தொடர்பாக 4 இளைஞர்களிடமும் 19 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

சென்னையில் நீண்டநேரம் மின்தடை.. இருளில் மூழ்கிய மாநகரம்.. புலம்பித் தவித்த மக்கள்!

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

குரங்கு அம்மைக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள் - சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

குரங்கு அம்மைக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள் - சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

''ரேசன் கடையில் இனி தேங்காய் எண்ணெய்?''.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

''தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை தயாராக உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசளித்து தகுதியானவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Coolie: ”ரஜினிக்காக மட்டும் தான் ஓக்கே சொன்னேன்..” லோகேஷுக்கு தக் லைஃப் கொடுத்த பிரபல ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமிட்டானது குறித்து உபேந்திரா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம்... பாடகர் மனோவின் மனைவி ஜமிலா கண்ணீர்

தவறு எங்கள் பக்கம் இல்லை திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம் என பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்தார். 

மதிக்காத மருத்துவர்கள்... பதவி விலகத் தயார்.... குண்டைத் தூக்கிப் போட்ட மம்தா பானர்ஜி!

சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகவும் தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

SJ Suryah: “இதுக்காக தான் மேரேஜ் பண்ணல... அது என்னோட போகட்டும்..” மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!

இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருவது குறித்து எஸ்ஜே சூர்யா மனம் திறந்துள்ளார்.

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்... அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

Thalapathy 69: அதிரி புதிரியாக ரெடியாகும் தளபதி 69 அப்டேட்ஸ்... அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருமாவளவன் காலம் தாழ்த்தி விட்டார்.. என்னை ஜெயிக்க வையுங்கள்.. அணல் பறந்த சீமானின் பேச்சு!

நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர்.. தங்கம் வென்ற தமிழக வீரர்

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ஜிதின் தங்கம் வென்றார்.