K U M U D A M   N E W S

Diwali Flight Tickets: என்ன கொடுமை சாரே இது..? விமான டிக்கெட் கட்டணம் உயர்வு... தீபாவளி அட்ராசிட்டி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ஆளுநரிடம் Ph.d. பட்டம் பெற்றவர் புகார் மனு... சட்டென உள்ளே வந்த பாதுகாவலர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ph.d., பட்டம் பெற்றவர் புகார் மனு அளித்தார். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களை மதிப்பதில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - அடித்தது எச்சரிக்கை மணி..!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை கோடி வாக்காளர்கள்..? - வெளிவந்தது முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆண் வாக்காளர்கள் 3,07,90,791, பெண் வேட்பாளர்கள் 3,19,30,833, 3ம் பாலின வாக்காளர்கள் 8,964 பேர் உள்ளனர் 

தேவநாதனுக்கு ஜாமின் - "முடியாது" சொன்ன ஐகோர்ட் - கசிந்த மிக முக்கிய தகவல்

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசுக்கு எதிராக குவிந்த விளையாட்டு வீரர்கள்... காரணம் என்ன..?

சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மயமாக்க முடிவெடுத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Udhayanidhi: துணை முதலமைச்சர் உதயநிதியின் உதயசூரியன் டி-ஷர்ட்... சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Suriya: ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி, வாடிவாசல்... லோகேஷ் முடிவு என்ன..? சூர்யா கொடுத்த அப்டேட்ஸ்

ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி படங்கள் குறித்து சூர்யா பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மாநாட்டிற்கு செல்ல சீறிய பைக் "ஒரு நொடியில் முடிந்த வாழ்கை" -நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி

தவெக மாநாட்டிற்கு சென்றபோது சென்னை தேனாம்பேட்டையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தமிழகமே திரும்பி பார்க்க இபிஎஸ் சொன்ன வார்த்தை...

அரசுக் கல்லூரிகளில் கௌரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்... நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோடியில் புரளும் மதுரை!! - என்ன காரணம் தெரியுமா..?

தீபாவளியை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்

அம்மாடியோவ் தங்கம் விலையா இது? - "அவ்வளவுதான் முடிச்சு விட்டாங்க..."

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375க்கு விற்பனையாகிறது.

TVK Vijay: “பண்டிகை கால தள்ளுபடி விற்பனை..” விஜய்யின் தவெக மாநாடு... டீ-கோடீங் செய்த திருமாவளவன்!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொப்புள் கொடி சர்ச்சை : இர்ஃபான் கைது..? - எதிர்பார்ப்பை எகிற விட்ட புதிய தகவல்

யூடியூபர் இர்ஃபான் அறுவை சிகிச்சை அரங்கில் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு..!! ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் கட்டணம்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் சென்னை - மதுரை விமான கட்டணம் ரூ.4,300 ஆக இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளது.

திடீர் போராட்டத்தில் குதித்த செவிலியர்கள்... காரணம் என்ன?

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் செவிலியர்களை பணியமர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மக்களுக்கு Happy News..! 14 மாதங்களுக்கு பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்குப் பிறகு பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. 2 மார்க்கங்களிலும் தலா 45 ரயில் சேவைகள்  இன்று முதல் இயக்கப்பட உள்ளன. 

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024 | Mavatta Seithigal

Metro Rail Diwali Bonus: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ்!

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து... 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" தவெக தலைவர் விஜய்க்கு உறவினர்கள் சரமாரி கேள்வி!

"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" என தவெக தலைவர் விஜய்க்கு இறந்தவர்களின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

தவெக தொண்டர்கள் மரணம் – விஜய் போட்ட ஒற்றை ட்வீட்டால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள்

அக்டோபர் 29ம் தேதி காலை 6 மணி தலைப்புச் செய்திகள்