இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தில், இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தைக் கிண்டல் செய்யும் விதமாகவும், அவரது பாடலைத் தவறான சூழலில் பயன்படுத்தியதாகவும் எழுந்த விமர்சனங்களுக்குத் தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை
'கருப்பு' திரைப்படத்தில், பணத்திற்காக உண்மைக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து போராடுவது போன்ற ஒரு காட்சியில், இளையராஜாவின் புகழ்பெற்ற ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான அடையாளமாகத் திகழும் இப்பாடலைத் தேவையற்ற சூழலில் பயன்படுத்தியதோடு, இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தையும் படத்தில் அவமதித்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆர்.ஜே. பாலாஜிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்துத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'டிரீம் வாரியர் பிக்சர்ஸ்' விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இசைஞானி இளையராஜாவுக்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.
தாழ்மையான வருத்தம்
உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

LIVE 24 X 7