தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘இந்தியன்’ படத்தின் அடுத்த கட்டமாக உருவாகிய ‘இந்தியன்-2’ படத்திற்கு பிறகு, அதன் தொடர்ச்சியான ‘இந்தியன்-3’ குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக படக்குழு தரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம், ஊழலுக்கு எதிரான ஒரு சமூகப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் நடித்த சேனாபதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதியவராக தோன்றிய சேனாபதியின் துணிச்சலான நடவடிக்கைகள், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான ‘இந்தியன்-2’, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிரம்மாண்டமான காட்சிகள், சமூக பிரச்சினைகளை பேசும் கதை மற்றும் ஷங்கரின் வழக்கமான பிரம்மாண்ட மேக்கிங் என பல அம்சங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டது.
ஆனால், படமோ யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு படுமோசமான விமர்சனங்களையும் , வசூல் ரீதியாக பெரும் பின்னடைவையும் பெற்றது. இந்தியன் படத்தில் கமல் ஹாசனின் நடிப்பு ஒரு பக்கம் பிரமிக்க வைத்தது என்றால் அதற்கு முக்கிய கரணம் எழுத்தாளர் சுஜாதாவின் வரிகளே ஆகும். சமீப காலமாக சங்கரின் படங்களுக்கு சரியான வரவேற்புகள் இல்லாமல் போனதற்கு சுஜாதாவின் எழுத்துக்கள் இல்லாதது முக்கிய காரணம் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எழுத்தாளர் சுஜாதாவின் மறைவு இயக்குனர் சங்கருக்கு ஒரு கை இல்லாமல் போனதாக தோன்றுகிறது என்று நெட்டிசன்கள் கமெண்டடித்து வந்தனர்.
இந்த நிலையில், ‘இந்தியன்-3’ படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல், கமல்ஹாசன் ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்தியன் 2-ம் பாகத்தில் மூன்றாம் பாகத்திற்கான லீடையும், அதில் பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாகவும் படக்குழு வெளியிட்டிருந்தது. சேனாபதி கதாபாத்திரத்தின் பின்னணி, அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது போராட்டம் ஆகியவை இந்தப் பாகத்தில் மேலும் விரிவாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 பாகத்திற்கு "இந்தியன் 2 Zero Tolerance" என்ற டைட்டிலுடன் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்கு "இந்தியன் 3 War Mode " என்ற டைட்டில் டீசரையும் அறிவித்திருந்தது.
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணி தமிழ் சினிமாவில் தனி கவனத்தை பெற்ற கூட்டணியாக இருந்து வருகிறது. ‘இந்தியன்’ திரைப்படத்தின் முதல் பாகம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து, அதன் அடுத்தடுத்த பாகங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தற்போது ‘இந்தியன்-3’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வெளியீட்டு தேதி மற்றும் படப்பிடிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றும் சேனாபதியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LIVE 24 X 7