அமெரிக்க நடிகர் மைகேல் டோலனை திருமணம் செய்துகொண்ட இலியானா கடந்த 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு "கோவா பீனிக்ஸ் டோலன்" என்று பெயர் வைத்திருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தையை இலியானா பெற்றெடுத்திருக்கிறார்.
தனக்கு இரண்டாவது குழந்தை கடந்த 19 ஆம் தேதி பிறந்ததாக இலியானா அறிவித்துள்ளார். இதுகுறித்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய இரண்டாவது மகன் புகைப்படத்தை பகிர்ந்து "எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தக் குழந்தையின் பெயர் கீனு ரஃபி டோலன் என அறிமுகம் செய்துள்ளார்.
நடிகை இலியானாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகர் பிரியங்கா சோப்ரா இந்த பதிவில் இலியானாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் இலியானா ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளியான ‘பர்பி’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். Iஇந்த படத்தில் ரன்வீர் கபூர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இலியானா கடைசியாக 2024 ஆம் ஆண்டில் தோ அவுர் தோ பியார்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், அவர் பெரிதாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இல்லை.
மேலும், கடந்த மே மாதத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய இலியானா, “அன்பு என்பது மரியாதை, மகிழ்ச்சியைப் போலவே சம்பாதிக்க வேண்டும் எனக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
LIVE 24 X 7









