தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கும் வகையில் புதிய ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரருமான அஜித்குமார் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகளுடன் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஃபார்முலா 1, 2, 3, 4 உள்ளிட்ட சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்கி, தமிழ்நாட்டை சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் அஜித்குமார் சமூக வலைதளப் பதிவில், “மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான கவனத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.
மேலும், தானும் தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்ட அஜித், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற கூற்றை மாற்றி, “தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய முன்னெடுப்பு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்!” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜயின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7