அஜித்தின் ரசிகர்கள் "வலிமை" பட அப்டேட் என ஒருவருடத்திற்கு மேலாக கேட்டுக்கொண்டிருந்த காலம் சென்று, ஒரே நாளில் மூன்று அப்டேட்களுடன் மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.
தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித் குமார் அடுத்த விளம்பர படமான "NOVA"வில் நடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் அவருடைய அடுத்த படமான "DARE DEVIL" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்ததே ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் மேலும் ஒரு அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் தனது கனவான ரேஸிங்கில் முழுகவனத்தையும் செலுத்திவந்த நிலையில் "அஜித்குமார் ரேஸிங்" என்ற பெயரில் ஒரு டீமை உருவாக்கி உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று வெற்றிகளை குவித்துவருகிறார். அது தொடர்பாகவே அவருடைய அடுத்த படம் வரவிருக்கிறது. அவருடைய ரேஸிங் அணியை மையப்படுத்தி இயக்குனர் ஏ.எல் .விஜய் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க "GLADIATORS : IN PURSUIT OF CHALLENGES" என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப்படத்தையும் Dare Devil படத்தை தயாரித்த அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமாரின் "BraveHeart Productions" தயாரிக்கிறது.
இந்த படத்தை பற்றி இயக்குனரான ஏ.எல்.விஜய் "அஜித் கார் ரேஸ் தொடர்பான ஆவணப் பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அது எப்போது ரிலீஸாகும் என அஜித்தே அறிவிப்பை வெளியிடுவார். இது அஜித்தின் பார்வைதான். அவரது கனவு. மோட்டார் விளையாட்டில் ரேஸிங் சாதாரண விஷயம் கிடையாது. அது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் அஜித் பணியாற்றுகிறார். பெரிய டீமே இதில் வேலை செய்கிறது. ஆவணப் படம் வரும்போது அஜித்தும், அவரது டீமும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது புரியும்" என்று அவருடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
காலையில் விளம்பர படமான "NOVA" வில் அஜித் "நாம விரும்புறதை தேடணும்... அதை நேர்மையா, ஆர்வமா பின்தொடரணும்..!" என்ற வசனங்களே சமூக வலைத்தளத்தை தெறிக்கவிட்ட நிலையில், அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா "AK 64 @ 05.41 PM" என்ற அப்டேட்டை போட்டவுடன் ரசிகர்கள் ஆரவாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.
பிறகு அந்த படத்தை "Good Bad Ugly" பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் மீண்டும் இணைவதாக முன்பே அறிவித்திருந்த நிலையில், "Dare Devil" என படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார். இந்த படத்தின் மூலம் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார் எனவும், "BraveHeart Productions" என தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயரிடப்பட்டுள்ளதையும் தெரிவித்திருந்தனர்.
ஒரு வருட காலமெல்லாம் அஜித்தின் பட அப்டேட்களுக்கு ரசிகர்கள் காத்திருந்த காலம் எல்லாம் இருந்த நிலை மாறி ஒரே நாளில் மூன்று அப்டேட்கள் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கத்தில் இந்த அப்டேட்களை கொண்டாடும் வகையில் அஜித்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LIVE 24 X 7