"சிறையில் சாதி? - மாநில அரசே பொறுப்பு"
சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
தெலங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து. ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்காக சென்றிருந்த போது பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்த மேடை சரிந்தது
மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், குமார், முத்துச்சாமி, முத்து ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு. மூதாட்டியை தாக்கிய புகாரில் மதுரை துணை மேயர் உட்பட 5 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு
திருப்பதி லட்டு சர்ச்சை: மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து ராகுல் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளின் லிஸ்ட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது.
"திருப்பதிக்கு லட்டு வழங்கியதாக கூறப்படும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?" மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக 8ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்
திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது
மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.