K U M U D A M   N E W S

சீனாவில் அறிமுகமான Redmi Note 14 5G சீரிஸ்!

Redmi Note 14 5g Series Launch in China : சீன ஸ்மார்ட் போன் மற்றும் எலெக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தற்போது தனது புதிய தயாரிப்பான Redmi Note 14 5G ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Redmi Note 14 5G சீரிஸில் Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Pro+ ஆகிய இரண்டு மாடல்கள் அறிமாகியுள்ளன. இதனுடன் சேர்ந்து Redmi Buds 6 இயர்பட்களும் அறிமுகமாகியது.

Nepolean: ஜப்பானில் மகனுக்கு திருமணம்... சொகுசு கப்பலில் டூர்... நெப்போலியன் வெளியிட்ட வைரல் வீடியோ!

Actor Nepoleon Viral Video : தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது மகன் தனுஷின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரும் அவர், சொகுசு கப்பலில் பயணம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணி... வேறு கருத்து கிடையாது.. ஜோதிமணி எம்.பி. பேச்சு!

Congress MP Jothimani : காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம், உரிய நேரத்தில் அது குறித்து பேசுவோம் என கரூரில் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு

திருச்சூரில் ATM-களில் கொள்ளையடித்து நாமக்கல் வெப்படை அருகே சிக்கிய அரியானா கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

Hezbollah : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம்.... கொண்டாடிய இஸ்ரேல் ராணுவம்!

Hezbollah Leader Hassan Nasrallah Death : நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

விருதுநகரை உலுக்கிய பயங்கரம்.. முக்கிய நபரை தட்டி தூக்கிய போலீஸ்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெடிவிபத்து தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Priyanka Mohan: வீடு வரை ஃபாலோ பண்ண ரசிகர்... வார்னிங் கொடுத்த பிரியங்கா மோகன்... இந்த பொழப்புக்கு!

Actress Priyanka Mohan Fan Shocking Video : கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், தனது ரசிகர் ஒருவரை எச்சரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மருத்துவ பரிசோதனை

நாமக்கல் அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அரசு மருத்துவம்னையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் கைது

காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.  

Rain Alert : 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... அடுத்த 7 நாட்களுக்கும் இப்படிதான் போல...!

Heavy Rain Alert in Tamil Nadu : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று (செப். 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி?

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் வான்வழி விமான சாகசத்தை பார்வையிட பிரதமர் மோடி அக்டோபர் 6ம் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்டாலின் திருமாவளவனின் டிராமா.... வாரிசுக்கு பதவி உயர்வு... எல்.முருகன் சாடல்!

L Murugan Criticized Udhayanidhi Stalin : முதலமைச்சர் அமெரிக்க பயணத்தில் பெரிதளவு முதலீடுகளை ஈர்க்காததை மக்களிடமிருந்து திசை திருப்பத்தான் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் கொள்ளை... வாகனங்கள் மீது கண்டெய்னர் மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி

நாமக்கலில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.

மக்களே உஷார்.. 3 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

IPL 2025 : ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா மும்பை இண்டியன்ஸ்?.. மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?

IPL 2025 - Hardik Pandya in Mumbai Indians : 2025ஆம் ஆண்டும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தக்கவைக்க மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Devara Box Office Collection : முதல் நாள் வசூலில் கெத்து காட்டிய தேவரா... பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ஜூனியர் என்டிஆர்

Devara Box Office Collection Worldwide Day 1 : ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்தப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 நகரங்களில் மினி டைடல் பூங்கா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

தீரன் பட பாணியில் கொள்ளை.. கர்நாடக போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Senthil Balaji : ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்தது.. மக்கள் சிரிக்கிறார்கள்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி

Sellur Raju About Senthil Balaji : செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்ற மு.க.ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சொத்து வரியை மீண்டும் உயர்த்திய திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

Sasikumar : “என்னை மன்னிச்சிடுங்க சசிகுமார் சார்..” முகநூலில் உருகிய நந்தன் இயக்குநர் இரா சரவணன்!

Era Saravanan Praised Sasikumar for Nandhan : சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. சாதிய அரசியலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், சசிகுமாரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், நந்தன் படத்தில் சசிகுமார் நடித்தது பற்றியும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் குறித்தும் இயக்குநர் ரா சரவணன் மனம் திறந்துள்ளார்.

"பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி; தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம்

சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரமாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பட்டாசு வெடிப்பது நின்றதால் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Meiyazhagan Box Office Day 1 : படம் சூப்பர்... ஆனா கலெக்ஷன் சுமார்... மெய்யழகன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Meiyazhagan Box Office Collection Day 1 : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

ENG vs AUS 4th ODI 2024 : டி20 போட்டி போல சீறிய இங்கிலாந்து; பெட்டி பாம்பாய் சுருண்ட ஆஸ்திரேலியா

ENG vs AUS 4th ODI 2024 Match Highlights : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.