K U M U D A M   N E W S

அண்ணா பல்கலை. விவகாரம் - ஞானசேகரனுக்கு பிப்.7 வரை...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு பிப்.7 வரை நீதிமன்றக் காவல்.

விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு.., விமானத்திற்குள்ளே இருக்கும் 183 பயணிகள்

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம்.

கனிமவள கொள்ளை.. தூக்கியடிக்கப்படும் அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம், துளையானூர் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ் பணியிட மாற்றம்.

மின் கம்பியில் உரசிய லாரி.., கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோரம்

பென்னாகரம் அருகே புல் ஏற்றி வந்த லாரி, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது.

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமே அதிமுக தான்- சிவசங்கர் குற்றச்சாட்டு

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக-வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ

பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

FIR கசிந்த விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு கிடுக்குப்பிடி விசாரணை

FIR கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

இரு கட்சியினரிடையே மோதல் – பரபரப்பான திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிக, இந்திய சமத்துவ மக்கள் கட்சியினரிடையே வாக்குவாதம்- பரபரப்பு

சிறையிலேயே இப்படியா? கோவை மத்திய சிறையில் அதிர்ச்சி

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி தற்கொலை.

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..? விஜய் எங்களுக்கு எதிரி இல்லை- ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டில் பல ரூபங்களில் சார்கள்- எடப்பாடி கண்டனம்

சென்னையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஞானசேகரனிடம் 7 நாள் விசாரணை – சிக்கிய ஆதாரங்கள் 

போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசேகரன்.

கைதிகளில் ஊதியத்தை சுருட்டிய அதிகாரிகள்.. உயர்நீதிமன்றம் அதிரடி

சிறைக்கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காதலிக்க மறுத்த பெண்.., இளைஞர் வெறிச்செயல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.

இது கூட இல்லையா? – போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டாததால் விவசாயிகள் சாலை மறியல்.

மதுரையில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

அடிப்படை வசதிகள் இல்லை என அதிகாரிகளிடம் மக்கள் புகார்.

செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மகாகும்பமேளா 2025: புனித நீராடிய அமித்ஷா.. சுவாமிகளுடன் நேரில் சந்திப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடிய பின்னர் பூரி சங்கராச்சாரியார், சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி ஜி மகராஜ் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

பாதுகாப்பு வளையத்தில் வேங்கைவயல் தடுத்து நிறுத்தப்பட்ட சிறுத்தைகள்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் தற்காலிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் முன்னிலையில் வெடித்த மோதல்

தஞ்சையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற கூட்டத்தில் பாஜகவினர் வாக்குவாதம்.

கனிமவள கொள்ளை அதிரடி நடவடிக்கை

அதிமுக நிர்வாகி புகாரில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாற்றம்.

"தமிழ்நாட்டில் பல ரூபங்களில், பல சார்கள்" - இபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் பல சார்கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக இபிஎஸ் கண்டனம்.

பைக் ஷோரூமில் தீ விபத்து.., பரபரப்பான பெங்களூரு

பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து.

சுற்றுலா பயணிகள் மோதல் - வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

பெட்ரோல் பங்கில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடையே மோதல் - பரபரப்பு.