K U M U D A M   N E W S

சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட்ட சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் தடுத்து நிறுத்தம்.

புதுக்கோட்டை, தஞ்சையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.

அதிகாரிகள் இல்லாத நிலை - பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுத்துறை அலுவலகங்கள் இல்லை.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு நமது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - முதலமைச்சர்

"திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது" - அண்ணாமலை

மும்மொழி விவகாரத்தில் திமுகவின் போலி நாடகங்களை மக்கள் இனியும் நம்பப்போவதில்லை- அண்ணாமலை

அம்மன் அர்ஜுனன் வீட்டில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சோதனை நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

'வெட்கமாக இல்லையா..' காங்கிரஸை சாடிய பிரீத்தி ஜிந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜகவிற்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்ததாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அங்கன்வாடியில் வீசப்பட்ட மனிதக்கழிவுகள்.. நெல்லையில் அதிர்ச்சி

டவுன் குன்னத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் மனிதக் கழிவுகள் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

10 அம்ச கோரிக்கைகள்..வெடித்த போராட்டம்

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதிய வழங்க வலியுறுத்தல்.

சுழற்சி முறையில் பல்கலைக்கழக துறைத்தலைவர் நியமனம்.. நீதிமன்றம் உத்தரவு

சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம், தகுதி, திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமனம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BJP-யில் இருந்து விலகிய Ranjana Nachiyar சந்தித்த முக்கிய நபர்

பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்துடன் சந்திப்பு.

மதுபோதையில் அட்ராசிட்டி.. தாக்குதலின் பகீர் CCTV காட்சி

சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் 3 பேர் கூடி ஒருவரை தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் IT ரெய்டு

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரெஸ்டிஜ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

விவசாயிகளை கவரும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை.. கருத்து கேட்ட அமைச்சர்

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் கருத்துக்கேட்பு கூட்டம்  இன்று நடைபெற்றது.

குற்றவாளி ஞானசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ள சிறப்பு புலனாய்வு குழு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுதிக்கப்படுகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

மூன்றரை வயது பெண் குழந்தையை சிதைத்த கொடூரன்.. சீர்காழியில் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3.5 வயது பெண்குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.

மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - வைரமுத்து

"மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மொழி திணிப்பாகவே கருதுவார்கள் எங்களுக்கு மொழி திணிப்பு வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து ஆவேசம்...."

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசத்திட்டம்... தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது..

பெரியார் குறித்து  கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் சீமானை கண்டிப்பதற்காக பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகை வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசு.. தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள்..!

2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி நடத்தி வருகின்றனர்.

அசாமில் 9,000 பெண்கள் பிஹூ நடனம்... பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அசாம் 2.0-வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

அசாமில் 9,000 பெண்கள் பிஹூ நடனம்... பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அசாம் 2.0-வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.