K U M U D A M   N E W S

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

திண்டுக்கல்லில் விரைவு ரயிலில் ரூ.13 லட்சம் பறிமுதல்.. வருமான வரித்துறையினர்  தீவிர விசாரணை

விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இன்றி ரூ14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ். எஸ். சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் சூரிய பூஜை.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நிர்வாகிகளுடன் வீதிக்கு வந்த தமிழிசை.. போலீசாருடன் வாக்குவாதம்

டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை கைது

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.

இறுதிக்கட்டத்தை எட்டிய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

பட்டுக்கோட்டையில் ஏழு  சிறுவர் சிறுமியர்கள் 8 உலக சாதனை..!

பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமியர்கள் உலக சாதனைப்படைத்த நிலையில், நோபல் நிறுவனத்திலிருந்து இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சமாதான முயற்சி - பிடிகொடுக்காத செங்கோட்டையன்?

3 நாட்களாக சட்டப்பேரவையில் நடைபெறும் எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து வருகிறார் செங்கோட்டையன்

தப்புமா சபாநாயகர் பதவி? அப்பாவு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய EPS

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு-வினை பதவி நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தொடை நடுங்கி திமுக.. போலீஸ் வலையில் பாஜகவினர்- அண்ணாமலை கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தொடைநடுங்கி திமுக அரசு என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

நள்ளிரவில் பயங்கரம்.. சென்னையில் இரட்டை கொலை..!

சென்னையில் நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் படுத்திருந்த இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வாசலில் குவிந்த போலீசார்..தமிழிசை உட்பட பாஜகவின் முன்னணி தலைவர்கள் கைது

பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம வங்கியில் கொள்ளை முயற்சி.. அலாரத்தால் தப்பிய கொள்ளையர்கள்..!

அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!

தமிழ்நாடு சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

'ரூ' பயன்படுத்தியது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்டவே 'ரூ' என்ற வார்த்தை மாற்றம்

நூதன முறையில் ஆடுகள் திருட்டு; கையும் களவுமாக சிக்கிய கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் கொடுங்காலூர் பகுதியில் மயக்கம் மருந்து ஸ்பிரே அடித்து ஆடுகள் திருட்டு

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. இன்று விவாதம்..!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

மளமளவென பரவிய தீ..சூழ்ந்த கரும்புகை.. ராமாபுரத்தில் பரபரப்பு

சென்னை ராமாபுரத்தில் உள்ள 3 கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

திருச்செந்தூரில் பக்தர் மரணம்- EPS கண்டனம்

திருச்செந்தூர் முருகன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது-இபிஎஸ்

நாகரீகம் குறித்து செங்கோட்டையனுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை

தொண்டர்களின் குரல் செங்கேட்டையனின் குரலாக ஒலிக்கிறது - டிடிவி

தமிழ்நாடு பட்ஜெட்.. பிரேமலதா சொன்ன எதிர்பாரா பதில்

"தேமுதிகவின் தேர்தல் அறிவிப்புகளே பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது

அமெரிக்க செல்ல 41 நாடுகளுக்கு தடை அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்..!

சட்டவிரோதமாக குடியேறிவர்கள் என்று கூறி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வரும் டிரம்ப் அரசு, அதன் அடுத்தக்கட்டமாக 41 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.