நெல்லிக்காய் ஜூஸ்.. வெறும் வயிற்றில் குடித்தால் நடக்கும் அற்புதங்கள்!

நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.

Aug 9, 2024 - 09:16
Aug 9, 2024 - 09:26
 0
நெல்லிக்காய் ஜூஸ்.. வெறும் வயிற்றில் குடித்தால் நடக்கும் அற்புதங்கள்!
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் ஏராளாமான சத்துக்கள் கொட்டிக்கிடங்கின்றன. தற்போதைய காலத்தின் தவறான உணவு பழக்கவழக்கங்களால் இல்லாத பொல்லாத நோய்களெல்லாம் வந்து சேர்கிறது. எனவே ஜங்க் உணவுகளை முற்றிலும் விட்டுவிட்டு இயற்கையான ஆரோக்கியமான உணவுகளை உண்டால் நீண்ட ஆயுளுக்கு கியாரண்டி. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. 

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்: 

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சக்திவாய்ந்த கலவையை நெல்லிக்காய் கொண்டுள்ளது. வைட்டமின் C, A, B1, B2, B3, B5, B6, B12 மற்றும் K ஆகியவை நெல்லிக்காயில் நிறைந்துள்ளன. இதைத் தவிர பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற கனிமங்களும் ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் எலாஜிக், கேலிக் மற்றும் ஃபைலெம்பெலிக் அமிலங்கள் போன்ற பாலிபினோலிக் கலவைகளும் நெல்லிக்காயில் உள்ளன. 

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் புளிப்புச் சுவை நிறைந்த நெல்லிக்காயை ஜூஸாகவோ அல்லது கடித்தோ வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்!

பொலிவான சருமம்: கொலாஜனை உருவாக்க வைட்டமின் சி அவசியம். இது நமது சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸில் உள்ள கலவைகள் முகப்பருவைக் குறைக்க உதவும். இது பொலிவான சருமத்திற்கு வழிவகுக்கும்.

அடர்த்தியான தலைமுடி: ஆயுர்வேத முறையில் ஆரோக்கியமான முடியை பராமரிக்க நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது மயிர்க்கால்களை பலப்படுத்தவும், முடி உதிர்வதை நிறுத்தவும், முடி பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது. நெல்லிக்காய் சாற்றைத் தொடர்ந்து உட்கொள்வது முடி உதிர்வைக் குறைக்க உதவும்.

மூட்டு வலி நிவாரணம்: நெல்லிக்காய் சாற்றை தொடர்ந்து குடிப்பதால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும். கீல்வாதத்துடன் போராடுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்: நெல்லிக்காயில் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் (LDL Cholestrol) உள்ளது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி இதய ஆரோக்கியம் மேம்படும். 

செரிமானத்தை மேம்படுத்தும்: செரிமானக் கோளாறுகளை சரிசெய்வதில் நெல்லிக்காய் கில்லாடி. வெறும் வயிற்றில் குடிக்கப்படும் நெல்லிக்காய் ஜுஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலுக்கு நிவாரணமாகவும் மற்றும் செரிமானத்துக்கும் உதவுகிறது. 

உடல் எடை குறைப்பு: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைத்து நல்ல வடிவத்தை பெற உதவும். நெல்லிக்காய் சாறு செரிமான அமைப்பை வலுப்படுத்தும். இதனுடன் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை கொண்டுள்ளது. இது கொழுப்பை ‘Burn’ செய்யவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் சாற்றில் ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமின்கள் உள்ளன மற்றும் கொழுப்பை சேர்க்காமல் ஆற்றலை அதிகரிக்கும் கூறுகளும் உள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow