Vaazhai BoxOffice: பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் டிமான்டி காலனி 2... விடாமல் போட்டிப் போடும் வாழை!

அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2ம் பாகம், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 28, 2024 - 02:40
Aug 28, 2024 - 02:44
 0
Vaazhai BoxOffice: பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் டிமான்டி காலனி 2... விடாமல் போட்டிப் போடும் வாழை!
வாழை - டிமான்டி காலனி 2 பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

: இந்தாண்டின் முதல் ஆறு மாதங்கள் கோலிவுட்டுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம் என பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகியும் திரையரங்குகள் ரசிகர்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடின. ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4ம் பாகம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. அதன்பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா, தனுஷின் ராயன் படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தன. இந்த வரிசையில் தற்போது தங்கலான் திரைப்படமும் இணைந்துள்ளது.

இதனிடையே மினிமம் பட்ஜெட்டில் உருவான டிமான்டி காலனி 2, வாழை படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி 2ம் பாகம், ஆக. 15ம் தேதி வெளியானது. தங்கலான் படத்துக்குப் போட்டியாக ரிலீஸான டிமான்டி காலனி 2, ஆரம்பத்தில் குறைவான ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டன. இதனால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் டிமான்டி காலனி 2 மாஸ் காட்டி வருகிறது.

அதன்படி இந்தப் படம் இதுவரை 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் மாரி செல்வராஜ்ஜின் வாழை, சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி படங்கள் வெளியாகின. இந்தப் படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸில் டஃப் கொடுத்துள்ளது டிமான்டி காலனி 2. அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் போட்டிப் போட்டு வசூலித்து வருகிறது. அதன்படி இந்தப் படம் வெளியாகி 4 நாட்களில் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.

மேலும் படிக்க - கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்!

இயக்குநர் மாரி செல்வராஜ்ஜின் ஆட்டோ பயோபிக் மூவியாக உருவாகியுள்ளது வாழை. 6 முதல் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான வாழை, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வசூலித்து வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாழை, டிமான்டி காலனி 2 என இந்த இரண்டு படங்களுக்கும் ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கோட் வெளியாகும் வரை வசூலில் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. அதுவரையிலும் வாழை, டிமான்டி காலனி 2 படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாழை படத்தின் வெற்றியை இயக்குநர் மாரி செல்வராஜ் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இப்படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்த இரண்டு சிறுவர்களுக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வாழை, டிமான்டி காலனி 2 இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் ஏறுமுகத்தில் இருப்பதால், திரையரங்க உரிமையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்த வாரம் விஜய்யின் கோட் வெளியாகவிருப்பது இன்னும் போனஸாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow