மேடையில் பேசவே பயமா இருக்கு... திருடனுக்கு வலிக்கத்தான் செய்யும்.. பிரகாஷ் ராஜ் பேச்சு!
நம்மிடம் இருக்கும் துணை முதலமைச்சர் சமத்துவத்தை பேசுகிறார் இன்னொரு துணை முதலமைச்சர் சகாரத்தில் பேசுகிறார் என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் திருச்சி சிவா எம் பி எழுதிய முரசொலியின் மடியில் தவழ்ந்தவை”, “மேடையெனும் வசீகரம்”, “கேளுங்கள் சொல்கிறேன்”, “எதிர்பாராத திருப்பம்”, “காட்சியும் கருத்தும்” ஆகிய நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (அக். 5) வெளியிட்டார. விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ், “கம்பீரமாக மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால் எனது குரல் அரசியல் குரல் இல்லை கலைஞனின் குரல். அப்படி பேசினால் அரசியல் ஆகிவிடுகிறது. கருணாநிதி இருந்தவரை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். நமக்காக பேச ஒருத்தர் இருந்தாரு. அப்பேர்ப்பட்ட குரலோட தொடர்ச்சிதான் சிவா சார். ஒருவர் சொன்னார் ரொம்ப தைரியமா பேசுகிறீர்கள் என்றார். உண்மைய சொல்றதுக்கு தைரியம் தேவையில்லை, பொய் சொல்றதுக்குத்தானே தைரியம் இருக்கணும்.
என்னுடைய மொழியை வந்து திருடாதே! என்னுடைய அடையாளமான என்னுடைய தனித்துவத்தை திருடாதே! என்னை காத்துட்டு இருக்குற என் மானிடத்த திருடாதே! என்றது அந்த திருடனுக்கு வலிக்குது. வலிக்கட்டும் பரவாயில்ல. அப்பேர்ப்பட்ட குரல்களோடு இங்க வருவதும் இந்த நிகழ்ச்சியில நான் நிற்கிறதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
நம்மகிட்ட ஒரு துணை முதல்வர் இருக்கிறார். அவர் சமத்துவத்தை பற்றி பேசுகிறார். இன்னொரு துணை முதல்வர் இருக்கிறார். அவர் சகாரத்தில் ஒன்று பேசுகிறார் நாங்கள் எல்லாம் சமவத்துவதோடு இருக்கிறோம்.
அண்மையில் துணை முதல்வர் உதயநிதி சனாதனத்தை பற்றி முன்பு பேசியதை சுட்டிக்காட்டி அந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பேசியிருக்கிறார்.
What's Your Reaction?






