Rajinikanth : “ரஜினி சார் ஹெல்த்... அப்படிலாம் சொல்லாதீங்க... பயமா இருக்கு” லோகேஷ் கனகராஜ் பதற்றம்!

Director Lokesh Kanagaraj About Rajinikanth Health Issue : சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Oct 5, 2024 - 16:25
Oct 5, 2024 - 19:57
 0
Rajinikanth : “ரஜினி சார் ஹெல்த்... அப்படிலாம் சொல்லாதீங்க... பயமா இருக்கு” லோகேஷ் கனகராஜ் பதற்றம்!
ரஜினி உடல்நலம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்

Director Lokesh Kanagaraj About Rajinikanth Health Issue : சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது. தசெ ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேட்டையனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

கடந்த வாரம் கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட்டானார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டென்ட் (Stent) மட்டும் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருக்கிறார். இதனால் கூலி படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்பது கஷ்டம் என்றும், இதன் காரணமாக படமே ட்ராப் ஆக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பேட்டி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ரஜினி சாரின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள், எங்களுக்கு பதற்றமாக உள்ளது. கூலி படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கும் போதே, தனது உடல்நிலை குறித்து ரஜினி சார் சொல்லிவிட்டார். அதற்கு ஏற்றபடி தான் கால்ஷீட்டும் கொடுத்திருந்தார். நாங்களும் அதனை பிளான் செய்து தான் மற்ற நடிகர்களின் கால்ஷீட், ஷூட்டிங் தேதியை முடிவு செய்தோம். ரஜினி சாருக்கு பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை.

ஆனால், சமூக வலைத்தளங்களிலும் யூடியூப்களிலும் சிலர் வேண்டுமென்றே அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை கூறுகின்றனர். அதுவும் ரஜினி சாரின் பக்கத்தில் இருந்து பார்த்தது போல அவரது உடல்நிலை பற்றி பேசுகின்றனர். தயவுசெய்து அப்படியெல்லாம் தவறான தகவல்களை பரப்பி எல்லோரையும் பதற்றப்படுத்த வேண்டாம். கூலி படப்பிடிப்பு 50 சதவீதம் வரை முடிந்துவிட்டது, ரஜினி சாரின் உடல்நிலையை பொறுத்து தான் ஷூட்டிங் ஷெட்யூல் செய்துள்ளோம். அதனால் இந்தப் படம் கண்டிப்பாக திரைக்கு வரும் என லோகேஷ் கனகராஜ் கூறினார்.

இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலை காரணமாக கூலி ட்ராப் ஆகும் என வெளியான தகவல்கள் வதந்தி என தெரியவந்துள்ளது. அதேபோல், இரண்டு வாரங்கள் ஓய்வுக்குப் பின்னர் கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் எனவும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதனால் சீக்கிரமே கூலி படப்பிடிப்பில் ரஜினியை பார்க்கலாம் எனத் தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow