Cryonics : இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்கும் முறை? அறிவியல் உலகில் இருக்கும் ஆச்சரியம்.. இது சாத்தியமா?

Cryonics Technology in Tamil : ஏற்கனவே இறந்த ஒரு நபரின் உடலை பதப்படுத்தி வைத்து வருங்காலத்தில் அந்த உடலை மீண்டும் உயிர்பிக்க வைக்கும் நடைமுறையே க்ரையோனிக்ஸ் (cryonics). மனிதன் சாகா வரம் பெற முயற்சிகள் மேற்க்கொள்ளும் க்ரையோனிக்ஸ் ஆராய்ச்சியை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

Oct 8, 2024 - 11:50
Oct 8, 2024 - 22:14
 0
Cryonics : இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்கும் முறை? அறிவியல் உலகில் இருக்கும் ஆச்சரியம்.. இது சாத்தியமா?
க்ரையோனிக்ஸ் ஆராய்ச்சி(Cryonics Technology in Tamil)

Cryonics Technology in Tamil : மனிதன் சாகா வரம் பெற முடியுமா என்ற அறிவியல் ஆராய்ச்சிகள் பல காலமாக நடைபெற்று வருகிறது. அதன் விளைவாகவே க்ரையோனிக்ஸ் (Cryonics) என்ற அறிவியல் முறை தற்போது தலைதூக்கியுள்ளது.

அது என்ன க்ரையோனிக்ஸ் (Cryonics)?

ஏற்கனவே இறந்த ஒரு நபரின் உடலை பதப்படுத்தி வைத்து வருங்காலத்தில் அந்த உடலை மீண்டும் உயிர்பிக்க வைக்கும் நடைமுறையே க்ரையோனிக்ஸ் (cryonics) என்கிறார்கள். கிரேக்கத்தில் இருந்து உருவான இந்த cryonics என்ற வார்த்தைக்கு "icy cold" என்பதே அர்த்தம்

எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

Cryonics என்ற இந்த நடைமுறை அறிவியல் அசுர வளர்ச்சியில் இருக்கும் 20ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பாட்டது அல்ல. இதை பற்றி 1962ம் ஆண்டிலேயே ஒரு புத்தமாக எழுதியிருக்கிறார் ராபர்ட் எட்டிங்கர் (Robert Ettinger). 1962ம் ஆண்டில் வெளியான  'The Prospect of Immortality’ என்ற புத்தகத்தில் இறந்தவர்களை உயிர்பிக்கும் நடைமுறை பற்றி எழுதியிருக்கிறார் ராபர்ட். இதனால் இவரை cryonics முறையின் தந்தை எனவும் அழைக்கிறது அறிவியல் உலகம். 2011ம் ஆண்டில் 92 வயதான இவர் உயிரிழந்த போது மிசிகனில் இவரது உடலே cryonics முறையில் பதப்படுத்தப்பட்டது. 

முதன்முதலில் பதப்படுத்தப்பட்ட நபர்:

ஆனால், 2011ம் ஆண்டில் ராபர்ட் cryonics முறையில் பதப்படுத்தப்படுவதற்கு முன்பே, 1967ம் ஆண்டில் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்த பெட்ஃபோர்ட் என்ற நபரின் உடல் பதப்படுத்தப்பட்டது. இவரது உடல் தற்போது அரிசோனாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

Cryonics: Medicine, Or The Modern Mummy?

நடைமுறை என்ன?

cryonic நடைமுறை என்பது ஒரு நபர் இறந்த பிறகே தொடங்கப்படும். ஒரு நபர் இறந்த ஒருசில மணி நேரங்களில் தொடங்கப்படும் இந்த நடைமுறையில், முதலில் உடல் ஐஸ் கட்டிகள் நிறைந்த பையில் cryonics செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர், பிரேதத்தில் உள்ள மொத்த ரத்தமும் வெளியேற்றப்படும். இதனையடுத்து, உடலில் உள்ள உருப்புக்களை பதப்படுத்துவதற்கான மருந்துகள் செலுத்தப்படும். vitrification என்றழைக்கப்படும் இந்த நிலையில், விஞ்ஞானிகள் அந்த உடலுக்கு எப்படி உயிர் கொடுப்பது என்ற வழியை கண்டுபிடிக்கும் வரை அந்த பிரேதம் லிக்குவிட் நைட்ரோஜனால் நிறப்பப்பட்ட அரையில் பதப்படுத்தப்படும். 

மேலும் படிக்க: சைபர் குற்றப்பிரிவுடன் கூட்டணி வைத்து யோகி பாபு செய்த செயல்!

இது சாத்தியமா?

இந்த க்ரையோனிக் (cryonic) முறை செய்ய பல கோடிகள் செலவாகிறது. ஆனால், 2023ம் ஆண்டு வரை சுமார் 500 நபர்கள் அல்லது பிரேதங்கள் இந்த முறைப்படி பதப்படுத்தப்பட்டிருக்கிறது. சில தங்களுடைய முழு உடலையும் பதப்படுத்தப்படுத்தி வைக்கவும், சிலர் தங்களது தலைகளை மட்டும் பதப்படுத்திவைக்கவும், இன்னும் சிலர் தங்களுடைய செல்லப்பிராணிகளின் உடல்களை பதப்படுத்திவைக்கவும் விரும்புகிறார்கள். தலையை மட்டும் பதப்படுத்திவைக்கும் முறையை நியூரோபிரசர்வேஷன் (neuropreservation) என்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow