TNPSC : அரசு பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் மாற்றம்... மென்பொருள் மூலம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு!
TNPSC Exam New Update : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் மென்பொருள் மூலம் கணினி வழி மதிப்பீட்டு முறையை கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TNPSC Exam New Update : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் மென்பொருள் மூலம் கணினி வழி மதிப்பீட்டு முறையை கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப் 2 முதன்மை தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் இந்த நடைமுறையை செயல்படுத்த அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுகள் முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் நிலை தேர்வுகள் விடைகளை தேர்ந்தெடுத்து விடை அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை பொருத்தவரை தேர்வர்கள் பாட வாரியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். எனவே முதன்மைத் தேர்வு விடைத்தாள் 60 முதல் 70 பக்கங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருத்துகின்ற பணியில் ஈடுபடும் நபர்கள் பல்வேறு குளறுபடிகளை செய்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் காலதாமதம் ஏற்படுவதாகவும், இதனால் தேர்வு முடிவுகளை அறிவிக்கப்பட்ட தேதிகளில் வெளியிட முடிவதில்லை என்பதும் அரசு பணியாளர் தேர்வாணையம் மீது முன் வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களாக இருந்த வருகின்றன.
தற்போது இதனை தவிர்க்கும் பொருட்டு விடைத்தாள் மதிப்பு எட்டு முறையில் மாற்றம் கொண்டுவர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே விடைத்தாள்கள் ஸ்கேன் செய்வது போன்று இந்த புதிய முறையிலும் ஸ்கேன் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து தேர்வர்களின் விடைத்தாள்களில் பாடவாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்களை தனியே தனியே பிரித்து எடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து கணினி வழியே பிரத்யேகமாக உருவாக்கப்படும் மென்பொருளின் உதவி மூலம் விடைத்தாள் திருத்தும் பேராசியர்களுக்கு விடைத்தாள்கள் பகிரப்படும். இதனைத் தொடர்ந்து அவர்கள் கணினி முன் அமர்ந்து விடைத்தாள்களை படித்து பார்த்து அதற்குரிய மதிப்பெண்களை மட்டும் வழங்குவார்கள். இந்த புதிய முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட இனி ஆட்கள் தேவைப்படமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மகன், மருமகனுக்கு மட்டும்தான் பதவி.. திமுகவை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்!
இதில் முக்கிய அம்சமாக விடையை படித்து மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்த குறைந்தபட்ச நேரம் முடிவடைவதற்கு முன்னர் திருத்தும் பேராசியர்களால் அடுத்த விடைக்கு செல்லவே முடியாது. இதையடுத்து வழங்கப்பட்ட மதிப்பெண்கள் கூட்டபட்டு அவை பதிவேற்றம் செய்யப்படும். இவை அனைத்தும் GIS எனப்படும். புவி தகவல் அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இறுதியாக பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வர்ககளுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






