பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple iPhone SE 4; ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் உடன் களமிறங்கும் புதிய மாடல்!

Apple iPhone SE 4 New Model will Launch in 2025 : ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple Iphone SE 4 மாடலை அடுத்த ஆண்டு 2025ல் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Aug 12, 2024 - 16:17
Aug 13, 2024 - 09:36
 0
பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple iPhone SE 4; ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் உடன் களமிறங்கும் புதிய மாடல்!
பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple Iphone SE 4

Apple iPhone SE 4 New Model will Launch in 2025 : இந்தியாவில் ஆப்பிள் IPhone மோகம் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆப்பிள் மொபைல்களில் உள்ள டெக்னாலஜியைத் தாண்டி வெறும் கவுரவத்திற்காகவே இந்த IPhone வாங்கும் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மோகம் தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. கண்ணாடி முன்பு நின்று IPhone வைத்திருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காகவே செல்ஃபி எடுப்பது மற்றும் Mobile Case போட்டால் ஆப்பிள் லோகோ தெரியாமல் போய்விடுமோ என்று Mobile Back Case கூட போடாமல் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்கள் ஏராளம். 

இப்படி இருக்கும் சூழலில் நடப்பாண்டிற்கான புதிய மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Iphone 15 மற்றும் Iphone 15 Pro Max ஆகிய மாடல்கள் சந்தைகளில் அடிபுடியாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் புதிய மாடல்களான iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, and iPhone 16 Pro Max ஆகியவை உலக சந்தைகளில் அறிமுகமாகவுள்ளது. 

நீண்ட நாட்களாகக் கூறப்பட்ட ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் அம்சம் இந்த மாடலில்(Apple Intellegence iPhone SE 4) அறிமுகமாகவுள்ளது. சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, தனிப்பட்ட மற்றும் தனியுரிமை என ஐந்து மிக முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் கீழ் தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

இத்துடன் மெசேஜஸ், கீநோட், ஃபிரீஃபார்ம் மற்றும் பேஜஸ் போன்ற செயலிகளில் படங்களை உருவாக்கும் வசதி வழங்கப்படுகிறது. பயனர்கள் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகராக காட்சியளிக்கும் படங்களை பல்வேறு விதங்களில் உருவாக்க முடியும். இந்த படங்கள் பயனர்களின் கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.  

இதுமட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய படைப்பாக Iphone SE 4 மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்வள் வெளியாகியுள்ளது. இந்த Iphone இதுவரை ஆப்பிளின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மற்றும் A18 chip ஆகிய அம்சங்கள் இடம்பெறவுள்ளதாம். Iphone 14 போன்ற டிசைனில் வடிவமைக்கப்படவுள்ள இந்த  Iphone SE 4 மாடல், 500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 50,000க்கு விற்பனைக்கு வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இரண்டு மாடல்களின் வரவிற்காக ஆப்பிள் பயனர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow