திரையரங்கில் வெளியான ரெட்ரோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியானது. ரெட்ரோ திரைப்படத்தினை ரசிகர்கள், தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியானது. ரெட்ரோ திரைப்படத்தினை ரசிகர்கள், தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
புழல் சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை காணாமல் போனதால் கைதியை தாக்கிய 7 கைதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.
கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் வசதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.
ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.
நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.