டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Telegram CEO Pavel Durov Arrest : டெலிகிராம் ஒரு செய்தி பரிமாற்ற செயலியாக இருந்தாலும், திரைப்படங்கள் பதிவிறக்கம், இலவசமான கோர்ஸ், என பல விஷயங்கள் டெலிகிராமில் உள்ளது. பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என பல செயலிகள் இருந்தாலும், நெட்டிசன்கள் மத்திய முக்கிய இடத்தை பெற்றுள்ளது டெலிகிராம்.
2013ம் ஆண்டில் தனது சகோதரர் நிக்கோலாயுடன் சேர்ந்து டெலிகிராம் செயலியை உருவாக்கினார் ரஷ்யாவில் பிறந்த துரோவ். டெலிகிராம் செயலி துபாயை தளமாக கொண்டது. இத்தனை ஆண்டு காலமாக உழைத்து உலகம் முழுவதிலும், 900 மில்லியன் பயனர்களை சென்று சேர்ந்துள்ளது டெலிகிராம் செயலி.
இந்த செயலி, ரஷ்யா, உக்ரைன் மற்றும் பல இடங்களில் அதிக பயனர்களை கொண்டுள்ளது இச்செயலி. மேலும், ஒரு பில்லியன் பயனர்களை கொண்டதாக டெலிகிராம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இச்செயலி உழைத்து வருகிறது.
ரஷ்யாவை விட்டு வெளியேறிய துரோவ்:
2014ம் ஆண்டில் தனது விகே செயலிக்கு எதிராக ரஷ்ய அரசு வைத்த நிபந்தனைகளை பின்பற்ற விருப்பம் இல்லாததால், அந்த நாட்டை விட்டே வெளியேரினார் துரோவ். பிறகு, அந்த செயலியை வேறொருவரிடம் விற்றார்.
கைது ஏன்?
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க: கேகேஆர் அணியின் கேப்டனாகும் SKY? மும்பை அணியில் நடந்தது இதுதானா?
டெலிகிராம் செயலி மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், துரோவ் தனது தளத்தில் குற்றவியல் பயன்பாட்டைக் காட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து இதுவரை டெலிகிராம் தரப்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.