இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையில் நடந்த போரின் 16ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போரில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றியதாக 12,400 அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ராணுவத்தினருக்கு பதவி உயர்வு
இது குறித்து அதிபர் அநுர குமார திசநாயக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் விடுதலைப் புலிகள் நடத்திய பிரிவினைவாதப் போர் ஒரு பெரும் துயரம், அது முடிவுக்கு வந்ததன் 16வது ஆண்டு தினத்தையொட்டி, ராணுவத்தினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு வன்முறைகள், கலவரங்களைத் தொடர்ந்து , அவர்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனி தமிழீழ நாடு கோரி விடுதலைப் புலிகள் அமைப்பினர் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதிர்ச்சி கொடுத்த அதிபர்
கடந்த 2009ம் மே 18ம் தேதி இலங்கையில் நடந்த போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய தரப்பிலும் பல்வேறு மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் போரின் 16ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழர்கள் உலகம் முழுவதும் துக்கம் அனுசரித்து வரும் துக்க வேலையில், இலங்கை அதிபரின் இந்த அறிவிப்பு தமிழர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதிவேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.