வீடியோ ஸ்டோரி

பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடசேமபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மழை நீரை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.