முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?
சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.