தமிழ்நாடு

அச்சுருத்தும் டேட்டிங் கலாச்சாரம்... ஆப்பு வைக்கும் டேட்டிங் ஆப்-கள்!

விவாகரத்து பெற்ற பெண் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு டேட்டிங் சென்று 4 சவரன் நகையை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுருத்தும் டேட்டிங் கலாச்சாரம்... ஆப்பு வைக்கும் டேட்டிங் ஆப்-கள்!
அச்சுருத்தும் டேட்டிங் கலாச்சாரம்... ஆப்பு வைக்கும் டேட்டிங் ஆப்-கள்!

சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சாப்ட்வேர் என்ஜினியராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் பம்பிள் என்ற டேட்டிங் செயலியை பயன்படுத்தி வந்தாகக் கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் போரூரைச் சேர்ந்த இளைஞர் பழக்கம் ஆகி உள்ளார். இருவரும் அந்த செயலி மூலம் அடிக்கடி சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் அந்த பெண்ணை சந்திக்க முடிவு செய்து நேரில் வரும்படி அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி அன்று இரவே கிண்டி கத்திபாரா அருகே இருவரும் சந்தித்துள்ளனர். அதன் பின் இருவரும் காரில் அண்ணாசாலையில் உள்ள புகாரி ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு உணவு அருந்தியபோது தனது கைப்பையில் இருந்த நான்கு சவரன் தங்க செயினை எடுத்து அந்த இளைஞர் கழுத்தில் அணிந்து கொண்டார் என்றும் பின்னர் தருவதாகக் கூறியவர் இது வரை திருப்பி தரவில்லை என்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அப்பெண் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 34 வயதான அப்பெண் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் என்பதும், மாடலாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், டேட்டிங் ஆப் மூலமாக டிஎல்எப்பில் உணவு கடை நடத்தி வரும் பிரசாந்த் என்ற நபர் அறிமுகம் கிடைத்து என்றும் இரவு ஊர் சுற்ற முடிவு செய்து இரவு 8 மணி அளவில் கிண்டியில் காரில் ஏறிய அவர்கள் பின் புகாரி ஹோட்டலில் உணவு அருந்தியபின், இரவு காட்சி திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, பின் அதிகாலை வரை சுற்றிவிட்டு வீட்டிற்கு சென்றதும் தெரியவந்துள்ளது. அவ்வாறு செல்லும் போதுதான் ஆண் நபர் செயினை எடுத்து சென்றதாகப் பெண் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த ஆண் நபர் ஊர் சுற்றி முடித்த பின் அந்த அந்த பெண் தன்னை விட வயதில் மூத்தவர் என்பதும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் எனவும் தெரியவந்ததால் செயினை திருப்பி கொடுத்து விட்டு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருதரப்பினருமிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.